புகார் பெட்டி வரவேற்பு பலகையை இடம் மாற்ற வேண்டும்
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிறுத்தம் அருகில், ஜி.எஸ்.டி., சாலையோரம் உள்ள மின் மாற்றி அருகில், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வரவேற்பு பலகை அமைக்கப்பட்டு உள்ளது.இது, மின்மாற்றியின் மிக அருகில் உள்ளதால், அந்த வழியாகச் செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.எனவே, இந்த வரவேற்பு பலகையை மாற்று இடத்தில் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ராஜேஷ், மறைமலை நகர்.