சாலையோரம் மண் கொட்டி சீரமைக்க வேண்டும்
தி ருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் சாலையிலிருந்து தத்தலுார் செல்லும் சாலை, 1 கி.மீ., உள்ளது. பழுதடைந்த இச்சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. எனினும் இச்சாலையின் இருபுறமும், முறையாக மண் கொட்டி சீரமைக்கவில்லை. அதனால், சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். லாரி மற்றும் வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் எதிரே வந்தால், இருசக்கர வாகனங்களில் வருவோர் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடமில்லை. எனவே, சாலையின் இரு புறங்களிலும், மண் கொட்டி சீரமைக்க வேண்டும். - எம்.முரளி, தத்தலுார்.