| ADDED : ஜூன் 04, 2024 12:45 AM
கே.கே.நகர் ராஜமன்னார் சாலை ஆர்.டி.ஓ., மைதானம் அருகே, மாநகராட்சி கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை முன் வரிசையாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.இலவச கழிப்பறை வாசலில் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாநகராட்சி கழிப்பறை எதிரே, டாஸ்மாக் அமைந்துள்ளது. இங்கு மது பாட்டில்கள் வாங்க வரும் நபர்கள், அருகில் உள்ள கடைகளில் இருந்து தண்ணீர், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை வாங்கி விட்டு, மாநகராட்சி கழிப்பறை முன் நிறுத்தப்பட்டுள்ள ஷேர் ஆட்டோக்கள் மறைவில் மது அருந்துகின்றனர்.பின், அந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றை, மாநகராட்சி குப்பை தொட்டி அருகே வீசி விட்டுச் செல்கின்றனர். இதனால், குப்பை தொட்டி அருகே அதிக அளவில் பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்டவை குவிந்துள்ளன.எனவே, பொதுவெளியை திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.