சென்னை: புகார் பெட்டி; நேரக்காப்பாளர் இன்றி பஸ் நிலையத்தில் அவதி
ஆவடி:பட்டாபிராம் பேருந்து நிலையத்தில் இருந்து, கிண்டி, பூந்தமல்லி மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமே தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.காலை, மாலை என இரண்டு நேரக்காப்பாளர் பணிபுரிந்து வந்தனர். இதனால், மேற்கூறிய மூன்று வழித்தட பேருந்துகள் முறையாக இயக்கப்பட்டு வந்தன.ஒரு வாரமாக, இரண்டாவது ஷிப்டில் பணிபுரியும் நேரக்காப்பாளர் இல்லாமல், அறை பூட்டப்பட்டு உள்ளது. இதை சாதகமாக்கி, பட்டாபிராம் வரை வரும் பேருந்துகள் ஆவடி உடன் நின்று விடுகின்றன. இதனால், பயணியர், பழையபடி ஆவடிக்கு சென்று, அங்கிருந்து இரண்டு பேருந்துகள் மாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட ஆவடி பேருந்து நிலைய கிளை மேலாளர், பட்டாபிராம் நேரக்காப்பாளரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வெங்கடேசன்,ஆவடி.