உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / ஆக்கிரமிப்பை தடுக்க வடிகால் கட்ட வேண்டும்

ஆக்கிரமிப்பை தடுக்க வடிகால் கட்ட வேண்டும்

அடையாறு மண்டலம், 174வது வார்டு, சாஸ்திரி நகர் 1வது அவென்யூவில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. அதை தகர்த்து, புதிதாக கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, பழைய வடிகால்வாய் இடிக்கப்பட்டது. பழைய வடிகால்வாய் சாலையோரம் கட்டாமல், சாலையின் மைய பகுதியில் இருந்து சற்று விலக்கி கட்டப்பட்டது. இதனால், சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. மீண்டும், அதே இடத்தில் வடிகால்வாய் கட்டினால், ஆக்கிரமிப்பு மேலும் அதிகரித்து சாலையின் அகலம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, சாலையோரம் வடிகால் கட்டினால், அனைத்து வகைகளிலும் பயன் அளிக்கும். அதற்கு ஏற்ப, வடிகால்வாயை சாலையோரம் கட்டும் வகையில், அதிகாரிகள், கவுன்சிலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராமசுப்பிரமணியன், சாஸ்திரி நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ