உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / புகார் பெட்டி / குளத்திற்கு மதிற்சுவர் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

புகார் பெட்டி / குளத்திற்கு மதிற்சுவர் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள பெருமாளும், பூந்தமல்லியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், ஒருசேர அருள்பாலிக்கின்றனர்.இக்கோவில் எதிரே உள்ள தீர்த்த குளத்தின் ஒரு பகுதி, பூந்தமல்லி டிரங்க் சாலையோரம் உள்ளது. குளத்தின் மூன்று பகுதியில் மதிற்சுவர் உள்ள நிலையில், டிரங்க் சாலையோர பகுதியில், மதில் சுவர் உயரம் குறைவாக உள்ளது.இச்சுவரின் மீது இரும்பு தடுப்புகள் அமைப்பதற்கு கட்டுமான கம்பிகள் பொருத்தப்பட்டு பணிகள் பாதியில் கைவிடப்பட்டுள்ளன. இதனால், டிரங்க் சாலையில் செல்வோர், குளத்தில் தவறி விழும் ஆபத்து உள்ளது. சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவு குளத்தில் விழுகின்றன.எனவே, டிரங்க் சாலையோரம் குளத்தையொட்டி மதிற்சுவரை விரைந்து அமைக்க வேண்டும்.- வேல்முருகன், பூந்தமல்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ