மின் கம்பத்தில் விளக்கு எரிஞ்சு ஆறு மாசமாச்சு! மின்வாரியம் கண்டுக்காததால் மின்கம்பம் சாய்ஞ்சே போச்சு
விளக்கு எரிவதில்லை பனப்பட்டி, பாப்பம்பட்டி ரோடு, சத்ய சாய் நகரில் உள்ள மின் கம்பத்தில், 6 மாதங்களாக விளக்கு எரிவதில்லை. இப்பகுதி கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. மின் வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. - குகன், பாப்பம்பட்டி.நடைபாதை சேதம் துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் அருகில், சாலையோர நடைபாதை சிலாப்கள் சிதிலம் அடைந்துள்ளன. பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். - அசோக்குமார், துடியலுார்.தெரு நாய் தொல்லை மாநகராட்சி 27வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு, பெரிய மாரியம்மன் கோயில் ரோட்டில் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் செல்வோரை துரத்தி கடிக்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்துக்கு உள்ளாகின்றனர். - பிரசாந்த் குமார், பெரிய மாரியம்மன் கோவில் ரோடு.மின் கம்பத்தை மாற்றணும் மாநகராட்சி, 63வது வார்டுக்கு உட்பட்ட ராமநாதபுரம், கன்னிகா பரமேஸ்வரி நகரில் உள்ள, மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மின் விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய கம்பம் அமைக்க வேண்டும். - ராஜன், கன்னிகா பரமேஸ்வரி நகர்.சாலையை சீரமைக்கணும் மாநகராட்சி 16வது வார்டுக்கு உட்பட்ட, தடாகம் ரோடு, இடையர்பாளையம், டி.வி.எஸ். நகர், ராஜலட்சுமி காலனியில், சாலை மிகவும் மோசமாக உள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டும். - தனசேகர், டி.வி.எஸ். நகர்.சுகாதார சீர்கேடு மாநகராட்சி, 68வது வார்டுக்கு உட்பட்ட சிவானந்தா காலனியில் கழிவுநீர் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கொட்டப்படும் கட்டட கழிவுகளால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. - நாச்சிமுத்து, சிவானந்தா காலனி.