புகார் பெட்டி,,
ஆக்கிரமிப்பால் அவதி கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கடைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். -திவ்யா, கள்ளக்குறிச்சி.கழிவறை பராமரிக்கப்படுமா?கள்ளக்குறிச்சி பஸ் நிலைய கட்டண கழிப்பிடத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால், பயங்கர துர்நாற்றத்தால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். -ஹரிபிரசாத், கள்ளக்குறிச்சி.மண் குவியலால் விபத்து அபாயம்கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் நான்கு வழி தேசிய சாலையோரங்களில் மண் குவிந்து காணப்படுவதால், விபத்து அபாயத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். -இளமுருகு, கள்ளக்குறிச்சி.