உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கள்ளக்குறிச்சி / புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்

தியாகதுருகம் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் உள்ள பெரிய பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்து வருகின்றனர்.-குமார், தியாகதுருகம்.

பயணிகள் நிழற்குடை தேவை

கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். -அருள், ரோடுமாமந்துார்.

கழிவு நீர் கலந்த மழை நீரால் அவதி

கள்ளக்குறிச்சி - துருகம் சாலையில், கழிவு நீர் கலந்த மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. -பாபு, கள்ளக்குறிச்சி.

மின் விளக்குள் இல்லாததால் அச்சம்

கள்ளக்குறிச்சி - பெருவங்கூர் செல்லும் ஏரிக்கரை சாலையில் தெரு மின் விளக்குள் இல்லாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். -ராஜாராமன், பெருவங்கூர்.

குப்பையால் சுகாதார சீர்கேடு

கள்ளக்குறிச்சி தென்கீரனுார் ஏரியில் உபரி நீர் வெளியேறும் இடத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.-பாஸ்கர், தென்கீரனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ