புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
சாலையில் கழிவு நீர்
கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் புறநகர் காவல் நிலையம் பின்புறம் உள்ள சர்வீஸ் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.-பிரசாந்த், கள்ளக்குறிச்சி. தொற்றுநோய் அபாயம்
திருநாவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே குப்பைகளை கொட்டுவதால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.-கணேசன், திருநாவலுார். மோசமான சாலைகள்
உளுந்துார்பேட்டை அருகே பொரசங்குறிச்சியில் இருந்து கிளாப்பாளையம் வரையிலான சாலை படுமோசமாக உள்ளது.-இளையராஜா, பொரசங்குறிச்சி. எரியாத தெரு விளக்குகள்
காட்டு வனஞ்சூர் அக்ரஹார தெருவில், மின்விளக்குகள் கடந்த 3 மாதங்களாக எரியவில்லை.-கிருஷ்ணமூர்த்தி, காட்டுவனஞ்சூர். சாலை ஆக்கிரமிப்புகள்
சங்கராபுரம் பஸ் நிலைய சாலையில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.-பாலு, சங்கராபுரம்.