உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி ..

மோசமான சாலை

கள்ளக்குறிச்சி, கிருஷ்ணா நகரில் கரடு முரடான சாலையால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.-குமரன், கள்ளக்குறிச்சி.

கழிவு நீர் பிரச்னை

கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலை பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்.-பாலாஜி, கள்ளக்குறிச்சி.

குடிநீர் குழாய் உடைப்பு

கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் ஊராட்சியில், 3 இடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது.-கொளஞ்சி, மாத்துார்.

போக்குவரத்து நெரிசல்

கச்சிராயபாளையம், காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பால், சாலையை விரிவுபடுத்த வேண்டும்.-ராமு, கச்சிராயபாளையம்.

ஆற்றில் கலக்கும் கழிவு நீர்

கச்சிராயபாளையம், கோமுகி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அய்யாக்கண்ணு, கச்சிராயபாளையம்.

வளைந்த மின் கம்பம்

உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே வளைந்து கிடக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.-அருண், உளுந்துார்பேட்டை.

நடைபாதை ஆக்கிரமிப்பு

உளுந்துார்பேட்டை பஸ் நிலைய நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். -கணேசன், உளுந்துார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை