மேலும் செய்திகள்
புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
19-May-2025
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பிரதான சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.-இளமுருகு அன்பரசு, சோமண்டார்குடி. சமூக விரோதிகளின் கூடாரம்
கள்ளக்குறிச்சி சிறைச்சாலை அருகே பயன்பாடின்றி உள்ள பழைய கோர்ட் வளாகம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.-ராம், கள்ளக்குறிச்சி. கூடுதல் பஸ் விடப்படுமா?
கள்ளக்குறிச்சி நகரிலிருந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.-சக்திவேல், தியாகதுருகம். ஷேர் ஆட்டோ வசதி தேவை
மாவட்ட தலைநகரமாக உள்ள கள்ளக்குறிச்சியில் தற்போது அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல ஷேர் ஆட்டோ வசதியை ஏற்படுத்திட வேண்டும்.-அசோக், கள்ளக்குறிச்சி. கரி துகள்களால் சுகாதார சீர்கேடு
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அரிசி ஆலைகளின் மூலம் வெளியேறும் கரி துகள்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-சதீஷ், கள்ளக்குறிச்சி. பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு
திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். -முருகேசன், பாடியந்தல். ஆக்கிரமிப்பால் பக்தர்கள் சிர மம்
திருக்கோவிலுார் சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்திருப்பதால், உலகளந்த பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. -கண்ணன், திருக்கோவிலுார்.
19-May-2025