உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சுகாதார சீர்கேடு புதுப்பட்டு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் ஆங்காங்கே உடைந்து கிடப்பதால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பிரேம், புதுப்பட்டு. கிடப்பில் வாய்க்கால் பணி கள்ளக்குறிச்சி விநாயகர் கோவிலை இடித்து அகற்றி, வாய்க்கால் கரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நடந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். கலைவாணி, கள்ளக்குறிச்சி. போக்குவரத்து நெரிசல் மேல்சிறுவளூர் கூட்ரோட்டில் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. குமார், மேல்சிறுவளூர். பள்ளி மாணவர்கள் அவதி கடுவனுாரில் பள்ளி துவங்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமான கனரக வாகனங்கள் செல்வதால், மாணவர்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். வெங்கட்ராமன், கடுவனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !