புகார் பெட்டி
போலீஸ் ஸ்டேஷன் வழி ஆக்கிரமிப்பு திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் கட்ட கோபுரம் வீதி, சன்னதி வீதி, மார்கெட் வீதி, பள்ளி வாசல்வீதி சாலைகளில் தள்ளுவண்டி கடைகள், தரை கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. -கிருஷ்ண பிரதாப் சிங், மணம்பூண்டி. புகார் பெட்டி வைக்கப்படுமா கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் புகார் புத்தகம் வைக்க வேண்டும். -பிரேம், கள்ளக்குறிச்சி. இறைச்சிக் கடையால் சுகாதார சீர்கேடு கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் இறைச்சி கடை மற்றும் மீன் கடைகள் கழிவு நீர் கால்வாய் அருகே இயங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. -பிரேம், கள்ளக்குறிச்சி. ஆக்கிரமிப்பில் ஏரி வாய்க்கால் கள்ளக்குறிச்சியில் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பிள்ளையார் கோவிலை இடித்து தள்ளி பல மாதங்களாகியும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. -கணேசன், கள்ளக்குறிச்சி.