/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / புகார் பெட்டி : மின் மாற்றி பராமரிப்பு இல்லாததால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுது
புகார் பெட்டி : மின் மாற்றி பராமரிப்பு இல்லாததால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுது
உ த்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, பிள்ளையார் கோவில் அருகே உள்ள மின்மாற்றி முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், குடியிருப்புகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு, இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே, அடிக்கடி பழுதடையும் மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்க, மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.அர்ச்சுனன், காட்டாங்குளம்.