உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / புகார் பெட்டி : சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

புகார் பெட்டி : சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

வ ண்டலுார் --- வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரம் செயல்பட்டு வரும் உணவகம் மற்றும் டீக்கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள், தங்களின் கனரக வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக நெடுஞ்சாலையோரம் நிறுத்தி செல்கின்றனர். இதனால், அவ்வழியாக வரும் மற்ற வாகனங்கள், எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனரக வாகனத்தின் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சாலையோரம் நிறுத்தும் கனரக வாகன ஓட்டிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மா. புஷ்பராஜ், ஒரகடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ