உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்ஊ புகார் பெட்டி; உடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்ஊ புகார் பெட்டி; உடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்

உடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்

ஸ்ரீ பெரும்புதுார் ஒன்றியம் பேரீஞ்சம்பாக்கம் கிராமத்தில் இருந்து, கூழங்கல்சேரி செல்லும் இணைப்பு சாலையோரம் மின் கம்பங்கள் வழியாக மின் வழித்தடம் செல்கிறது. சமீபத்தில் இதில் ஒரு மின்கம்பம் சாய்ந்து விழுந்து சேதமடைந்தது. அதில், மின் கம்பங்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த கம்பியால், அருகே உள்ள மற்றொரு மின் கம்பத்தின் உச்சியில் கான்கிரீட் உதிர்ந்து சேதமானது. தற்போது, மின் கம்பம் இரும்பு கம்பிகளால் மட்டுமே தாங்கி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின் கம்பம் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் அமைக்க, மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - - வி. சக்கரபாணி, பேரீஞ்சம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை