மேலும் செய்திகள்
புகார் பெட்டி : சாலை வளைவில் வேகத்தடை வேண்டும்
20-May-2025
வாலாஜாபாத் ஒன்றியம், ஆண்டிசிறுவள்ளூர் கிராமத்தில் இருந்து, மேட்டு காலனி வழியாக பரந்துார் செல்லும் சாலை உள்ளது. ஆண்டிசிறுவள்ளூர், சேரிதாங்கல் உள்ளிட்ட பகுதியினர், இச்சாலையை பயன்படுத்தி மேல்பொடவூர், பரந்துார் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையில், ஆண்டிசிறுவள்ளூர் மேட்டுக் காலனியில் ஒரு பகுதி சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. பழுதான இச்சாலை சிறு மழை பெய்தாலே சகதியாக மாறி விடுகிறது.இதனால், இருசக்கர வாகனங்களின் சக்கரம் சேற்று மண்ணில் சிக்கி விபத்திற்குள்ளாகின்றனர்.எனவே, பழுதடைந்த இந்த சாலை பகுதியை சீர்செய்து தர சம்பந்தப்டட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- டி. செல்வக்குமார்,ஆண்டிசிறுவள்ளூர்.
20-May-2025