/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் புகார் பெட்டி:கோவில் மாடவீதியில் வாகன நிறுத்தத்தால் இடையூறு
காஞ்சிபுரம் புகார் பெட்டி:கோவில் மாடவீதியில் வாகன நிறுத்தத்தால் இடையூறு
கோவில் மாடவீதியில் வாகன நிறுத்தத்தால் இடையூறு
காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில், சாலையின் இருபுறமும், சாலையை ஆக்ரமித்து, தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை ‛பார்க்கிங்' செய்து விட்டு செல்கின்றனர்.போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால், காமாட்சியம்மன் கோவில் அருகில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதிலும் இடையூறு ஏற்படுகிறது. இவ்வழியாக செல்லும் மாணவ- -மாணவியர் நெரிசல் சிக்குவதால், பள்ளிக்கு தாமதமாக செல்கின்றனர். எனவே, காமாட்சியம்மன் கோவில் மாட வீதிகளில் வாகனங்களை பார்க்கிங் செய்ய போலீசார் தடை விதிக்க வேண்டும்.- எல்.கண்ணன்,காஞ்சிபுரம்.