காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குண்ணம் சிறுபாலத்திற்கு தடுப்பு அவசியம்
குண்ணம் சிறுபாலத்திற்கு தடுப்பு அவசியம்
வாலாஜாபாத் -- சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில், குண்ணம் காலகண்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள சிறுபாலத்தில் ஒருபுறம் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால், இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, நிலைத்தடுமாறி கால்வாயில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, குண்ணம் சிறு பாலத்திற்கு தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா. முத்து,குண்ணம்.