உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லை

காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லை

திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லை

உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில் வசிப்போர் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளின் பின்புறம் பழம், காய் தரக்கூடிய மரங்களை வளர்த்து வருகின்றனர்.இப்பகுதியில், இரண்டு ஆண்டாக 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றிவரும் குரங்குகள், காய், பழம் தரக்கூடிய மரங்களை சேதப்படுத்தி, வீடுகளில் வைக்கப்பட்டுள்ள காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை எடுத்து செல்கின்றன.எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவரும் குரங்குகளை பிடிக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -ஆர்.எஸ்.அறிவழகன்.திருப்புலிவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !