காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?
சேதமடைந்த குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?
உத்திரமேரூர் ஒன்றியம், காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து உள்ளது.நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்களில் கான்கிரீட் பெயர்ந்து வருகிறது. இந்த தொட்டிக்கு அருகே அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள், விளையாடி வருகின்றனர்.அப்போது, இடிந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- ஆர். ராமகிருஷ்ணன்,காட்டுக்கொல்லை.