தலைசாய்ந்த சிசிடிவி கேமரா சீரமைப்பது அவசியம்
காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் போலீசார் வைத்துள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவில் ஒன்று, தலை சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்தாலும், குற்ற செயலில் ஈடுபட்டு தப்பி செல்வோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, தலை சாய்ந்த நிலையில் உள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை சீரமைக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.ஜெய்கணேஷ், காஞ்சிபுரம்.