புகார் பெட்டி : நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்
கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துார் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி பகுதிவாசிகள் திருவள்ளூர் சென்று வருகின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணியர் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்.- சி. பாலன், கடம்பத்துார்.