உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / புதிய டிக்கெட் கவுன்டர் ஏற்படுத்த வேண்டுகோள்

புதிய டிக்கெட் கவுன்டர் ஏற்படுத்த வேண்டுகோள்

திருத்தணி ரயில் நிலையத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் ம.பொ.சி., சாலை மற்றும் காந்தி பிரதான சாலை வழியாக, ரயில் நிலையம் வந்து, சென்னை சென்ட்ரல், ரேணிகுண்டா மார்க்கமாக சென்று வருகின்றனர். பயணியருக்கு ம.பொ.சி., சாலை வழியாக ரயில் நிலையத்திற்கு வரும் இரண்டு கவுன்டர்கள் மூலம், பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்கின்றனர். அதே நேரத்தில், காந்தி பிரதான சாலை வழியாக வரும் பயணியர், டிக்கெட் பெறுவதற்கு மேம்பாலத்தில் ஏறி, முதல் நடைமேடைக்கு சென்று, அங்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு, மீண்டும் மேம்பாலம் வழியாக, 2 மற்றும் 3ம் நடைமேடைக்கு வரவேண்டியுள்ளது. எனவே, காந்தி பிரதான சாலை வழியாக வரும் பயணியருக்காக, புதிதாக டிக்கெட் கவுன்டர் அமைக்க வேண்டுகிறேன். – க.விநாயகம், திருத்தணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை