திருவள்ளூர்: புகார் பெட்டி; குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் அபாயம்
குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் அபாயம்
திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், கே.ஜி.கண்டிகை ஊராட்சி உள்ளது. தற்போது நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.சாலை விரிவாக்க பணிகளுக்காக, பொக்லைன் இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டும் போது, முறையாக தோண்டாமல் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டதால், குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது.இதனால் கழிவுநீர், குடிநீர் குழாயில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.- எஸ்.அந்தோணி, கே.ஜி.கண்டிகை.