/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; பாதுகாப்பில்லாத மின்மாற்றி மின்துறை அலட்சியம்
திருவள்ளூர்: புகார் பெட்டி; பாதுகாப்பில்லாத மின்மாற்றி மின்துறை அலட்சியம்
பாதுகாப்பில்லாத மின்மாற்றி மின்துறை அலட்சியம்
திருவாலங்காடு சன்னிதி தெருவில் 400 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு திருவாலங்காடு நெடுஞ்சாலை பகுதியில் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் வாயிலாக மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வந்தது. அப்பகுதியில் 100 முதல் 140 வோல்ட் மின்சாரம் மட்டுமே கிடைப்பதால் மின்சாதன பொருட்கள் இயங்குவதில்லை. அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதையடுத்து ஜூன் மாதம் சன்னிதி தெருவில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதை சுற்றி வேலி அமைக்காமல் திறந்த வெளியில் பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - க. முருகன், திருவாலங்காடு.