ரயில்வே மேம்பாலத்தில் ஒளிராத மின் விளக்குகள்
கடம்பத்துார் பகுதியில் உள்ள திருப்பாச்சூர் – கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை வழியே, தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கடம்பத்துாரில், ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் விளக்குகள், இரவு நேரத்தில் ஒளிராததால், அப்பகுதியில் செல்லவே அச்சமாக உள்ளது. இதுகுறித்து, பல முறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள், ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – வேல்முருகன், கடம்பத்துார்.