ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுமா?
புட்லுார் ஊராட்சியில் உள்ள வீடுகளில், மின் பயனீட்டு அளவு முறையாக எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும், சில வீடுகளில் பயனீட்டு அளவு தவறாக உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகளவில் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மாதந்தோறும் மின் பயனீட்டு அளவு எடுத்தாலே, மின் கட்டணம் குறையும். தமிழக அரசு அறிவித்த, 'ஸ்மார்ட் மீட்டர்' பொறுத்தினாலே, மின் பயனீட்டு அளவில் தவறு ஏற்படாமல் இருக்கும். எனவே, மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜி.செந்தில்குமார், புட்லுார்.