உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / புகார் பெட்டி குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

புகார் பெட்டி குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

திருத்தணி ஒன்றியம், கார்த்திக்கேயபுரம் கிராமத்திற்கு செல்லும் வழியில், ஊராட்சி பொதுக்குளம் உள்ளது. இந்த குளத்தில், கோடைக்காலத்தில் இரண்டு மாதங்கள் தவிர, மீதமுள்ள மாதங்களில் குளத்தில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்.இந்த குளம், கார்த்திக்கேயபுரம் கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலையோரம் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.இதுதவிர, நீச்சல் தெரியாத சிறுவர்கள் அடிக்கடி குளத்தில் இறங்குவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், குளத்தில் குப்பை, கழிவு கொட்டுவதால் தண்ணீர் மாசுபடுகிறது. ஆகையால் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகிறேன்.- -சு.சேகர், கார்த்திகேயபுரம்.கே.ஜி.கண்டிகையில்புறக்காவல் மையம் வேண்டும்திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பஜாரில், 150க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், நான்கு திருமண மண்டபங்கள், இரண்டு வங்கிகள், பொது நுாலகம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, கூட்டுறவு வங்கி, டாஸ்மாக் கடைகள் மற்றும் நான்கு கோவில்கள் உள்ளதால், தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் கே.ஜி.கண்டிகை்கு வந்து செல்கின்றனர்.மேலும், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பயணியர் மற்றும் மாணவர்கள், திருத்தணி மற்றும் சோளிங்கர் மார்க்கத்திற்கு வந்து செல்வதற்கும், கிராம மக்கள் தாங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் கே.ஜி.கண்டிகைக்கு வந்து செல்கின்றனர்.ஆனால், இதுவரை புறக்காவல் மையம் திறக்கப்படவில்லை. இதனால் கே.ஜி.கண்டிகை பகுதியில் அடிக்கடி தகராறு மற்றும் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. எனவே, புறக்காவல் மையம் அமைக்க வேண்டுகிறேன்.- ஆர். கேசவன், கே.ஜி.கண்டிகை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை