உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருப்பூர் / உழவர் சந்தை முன் பல்லாங்குழி சாலை

உழவர் சந்தை முன் பல்லாங்குழி சாலை

பகலிலும் 'பளிச்'

நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வீதியில் பகலில் தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. - வின்சென்ட் ராஜ், ராயபுரம்.

அபாய மின்கம்பம்

பி.என்., ரோடு மில்லர் பஸ் ஸ்டாப்பில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சரவணகுமார், மில்லர் பஸ் ஸ்டாப்.

குடிநீர் வீண்

ராம் நகர் 3வது வீதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தொடர்ந்து வெளியேறி சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. - ஈஸ்வரன், ராம் நகர். n பலவஞ்சிபாளையம், காளிகுமாரசாமி கோவில் எதிரில் குழாய் சேதமடைந்து, மூன்று நாட்களாக குடிநீர் வெளியேறி ரோட்டில் தேங்கி நிற்கிறது. - காயத்ரி, பலவஞ்சிபாளையம்.

கால்வாய் ஆக்கிரமிப்பு

எம்.எஸ்., நகர் 2வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் மீது, இரும்பு கம்பிகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கால்வாயை சுத்தம் செய்ய முடிவதில்லை. - ராஜேந்திரன், எம்.எஸ்., நகர்.

விபத்து அபாயம்

எம்.எஸ்., நகர் நால் ரோட்டில் சந்திரா காலனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடம், பக்கவாட்டு சுவர் சேதமடைந்து, விழும் அபாயத்தில் உள்ளது. - ரஞ்சித், திருப்பூர்.

ரோடு மோசம்

தென்னம்பாளையத்தில் இருந்து ஏ.பி.டி., ரோடு செல்லும் சாலை உழவர் சந்தை முன், குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. - செல்வராஜ், மீனாம்பாறை. n தோட்டத்துப்பாளையம் ராக்கியாகவுண்டன் புதுார், கணபதி நகரில் தார் ரோடு போடாமல், காலம் கடத்தி வருகின்றனர். - சந்திரசேகரன், தோட்டத்துப்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

BALU
செப் 18, 2025 17:22

நான் பலமுறை இந்த பதிவை தினமலர் நாளிதழில் சொல்லி இருக்கிறேன். ஆனால் திருப்பூர் அதிகாரிகள் ஒருவருக்குக்கூட செவி சாயவில்லை, இருந்தாலும் இந்த பதிவை நான் போட்டுக்கொண்டுதான் இருப்பேன். எங்கள் ஊருக்கு வருகின்ற பேருந்து நம்பர் 30 பல்லடத்திலிருந்து-நாரணபுரம்-கல்லம்பாளையம்-சேடபாளையம்-தொட்டிஅப்புச்சிக்கோயில் அறிவொளிநகர் அந்த ஏரியாவிலிருந்து இந்த பதிவை போடுகிறேன். நேற்று 17-09-2025-புதன் காலை 8.30 மணிக்கு வருகின்ற பேருந்து வர வில்லை, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு போகின்ற ஆண்கள், பெண்கள் எல்லாரும் அன்று ரொம்ப அவதிக்கு ஆளானோம். அப்படியே ஆட்டோ பிடிச்சி சின்னக்கரை வந்தால் மெயின் ரோட்டில் எந்த பேருந்தும் நிற்பதில்லை. மாற்று பேருந்து அனுப்பனும் என்ற இது கூட தெரியாத அதிகாரிகள் இருக்கிறார்கள். ஓட்ட, ஓடசு உள்ள பேருந்தை எங்கள் ஊருக்கு அனுப்புகின்றனர். அரசாங்கத்தால் உங்கள் ஊருக்கு விடமுடியாது என்று எழுத்து பூர்வமாக கொடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.


முக்கிய வீடியோ