உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருப்பூர் / குடிநீர் விரயம் இப்போது... தடுக்கும் நேரம் எப்போது?

குடிநீர் விரயம் இப்போது... தடுக்கும் நேரம் எப்போது?

அபாயம்திருப்பூர், தெய்வம் தியேட்டர் ரோட்டில் மின்கம்பி மரக்கிளைகளுக்குள் உள்ளது. மரக்கிளை உடைந்து மின்கம்பி மேல் தொங்கிய நிலையில் உள்ளது.- ஈஸ்வரன், பி.என்., ரோடு.வீண்n திருப்பூர், ஜெய்வாபாய் ஸ்கூல் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகும் முன், குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.n திருப்பூர், காமராஜர் ரோட்டில், பாலம் கீழ்ப்புறம் குழாய் உடைந்து, இரண்டு மாதமாக மெயின் குழாயில் இருந்து தண்ணீர் வீணாகிறது. குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- செல்வமணி, காமராஜர் ரோடு.n திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு, டீச்சர்ஸ் காலனி மூன்றாவது வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது.- சபரீஸ், டீச்சர்ஸ் காலனி.n திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு ஸ்டாப்பில், முதல் குடிநீர் திட்ட குழாய் உடைந்து, 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகி, கால்வாயில் கலக்கிறது.- ஜோதியப்பன், பாளையக்காடு.சேதம்தமிழ்நாடு தியேட்டர் ஸ்டாப் - கருப்ப கவுண்டம்பாளையம் ரோடு சேதமாகியுள்ளது. வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.- செல்வராஜ், கருப்பகவுண்டம்பாளையம்.தொல்லைகலெக்டர் அலுவலக வளாகத்தில், வெளிப்புற மைதானத்தில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. நாய்களை பிடித்து செல்ல வேண்டும்.- செல்வா, பல்லடம் ரோடு.n சாமுண்டிபுரத்தில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம், நாய் பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதே இல்லை.- ஈஸ்வரமூர்த்தி, சாமுண்டிபுரம்.ஆபத்துதாராபுரம் ரோடு, பலவஞ்சிபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் நிழற்குடை எந்நேரமும் பயணிகள் தலையில் விழும் நிலையில், தொங்கியபடி உள்ளது.- ஜெயக்குமார், பலவஞ்சிபாளையம்.தேக்கம்கல்லாங்காடு, அம்மன் நகர், தாய்த்தமிழ் பள்ளி வீதியில் வெளியேற வழியின்றி மழைநீர் தேங்குவதால், கொசுத்தொல்லை அதிகரிக்கிறது.- கோகுல்ராஜ், கல்லாங்காடு.அரைகுறைஅவிநாசி - கருவலுார் - மேட்டுப்பாளையம் சாலை சேதமாகிய பகுதியில் அரைகுறையாக சிமென்ட் வைத்து சாலை செப்பனிடப்படுகிறது. தரமாக, முழுமையாக பணி மேற்கொள்ள வேண்டும்.- குமாரசாமி, அவிநாசி.உடைப்புஅரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வாகனங்கள் முன்னேறி செல்லாமல் இருக்க வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் உடைந்து, சேதமாகிய நிலையில் உள்ளது. புதிய தடுப்புகளை மாற்ற வேண்டும்.- ஆனந்தமுருகன், பெரிச்சிபாளையம்.சீர்கேடுஎஸ்.வி., காலனி, டவர் லைன் வீதியில் தேக்கமாகும் குப்பைகளை அவ்வப்போது அள்ளுவதில்லை. குப்பை தேக்கத்தால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- தமிழ்செல்வன், எஸ்.வி., காலனி.சகதிக்காடுகாலேஜ் ரோடு, அணைப்பாளையம், ஆர்.டி.ஓ., அலுவலக பயிற்சி மைதானம் செல்லும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. மண் கொட்டி சீரமைக்க வேண்டும்.- செல்வராஜ், அணைப்பாளையம்.தடுமாற்றம்நெருப்பெரிச்சல் - வாவிபா ளையம் சாலை சேதமடைந்து, குழிகள் மண் போடப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. வளைவில் திரும்புவோர் தடுமாறுகின்றனர்.- ஈஸ்வரமூர்த்தி, நெருப்பெரிச்சல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி