புகார் பெட்டி..
குண்டும், குழியுமான சாலை விழுப்புரம், ஆசிரியர் நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். - சிவராமன், விழுப்புரம். மாடுகளால் விபத்து அபாயம் ராமானுஜபுரம் கிராம சாலையில் மாடுகள் திரிந்து கொண்டிருப்பதால் விபத்து அபாயம்ஏற்பட்டுள்ளது. - கனகவேல், ராமானுஜபுரம். நாய் தொல்லையால் அச்சம் பில்லுார் கிராமத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் சாலையில் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். - மண்ணாங்கட்டி, பில்லுார். விதிகளை மீறும் வாகனங்கள் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நிறுத்தமில்லாத இடத்தில் பஸ், ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிவதால் போக்குவரத்து பாதிக்கிறது. - சஞ்சீவி, விழுப்புரம்.