உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கள்ளுக்கான தடையை நீக்க முதல்வருக்கு 2,000 தபால்கள்

கள்ளுக்கான தடையை நீக்க முதல்வருக்கு 2,000 தபால்கள்

பல்லடம்:தமிழகத்தில், 'கள்'ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, முதல்வருக்கு, 2,000 தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், நேற்று முன்தினம், கள் விடுதலை மாநாடு நடத்தப்பட்டது. அதில், ஒரு பகுதியாக, கள் தடையை நீக்க வலியுறுத்தி, நேற்று முன்தினம், தமிழக முதல்வருக்கு, 2,000 தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன.அவற்றில், 'கள்' மீதான தடையை நீக்க வேண்டும். அதை உணவுப் பொருளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும். மதுவை அறவே ஒழிக்க வேண்டும். தமிழகம் முழுவதும், கள்ளச்சாராயத்தை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:பல்லடத்தில் நடந்த 'கள்' விடுதலை மாநாட்டின் போதே, முதல்வருக்கு, தபால் அட்டை அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.இதன்படி, விவசாயிகள் தனித்தனியாக முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பி வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, 'கள்' மீதான தடையை நீக்கி, மதுவிலக்கு பட்டியலில் இருந்தும் 'கள்' நீக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !