உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஐந்து நாளாக விவசாயிகள் போராட்டம்: 73 ரயில்கள் ரத்து

ஐந்து நாளாக விவசாயிகள் போராட்டம்: 73 ரயில்கள் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அம்பாலா: ஹரியானா மாநிலத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தால் அம்பாலா-அமிர்தசரஸ் வழி தடத்தில் 73 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.பஞ்சாப் ஹரியானா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஷம்புவில் விவசாயிகள் கடந்த 5 தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளதை கண்டித்தும் அவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் விவசாயி்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பாட்டியாலா மாவட்டத்தின் ஷம்புவில் சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்பின் கீழ் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அம்பாலா-அமிர்தசரஸ் வழித்தடத்தில் ஷம்பு ரயில் நிலையத்தில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக 73 ரயில்கள் இன்று (21-ம் தேதி) ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக பல ரயில்கள் வேறு மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஏப் 22, 2024 00:07

வெளிநாட்டினர்களை பிடித்து நொங்கெடுக்க வேண்டியதுதானே? அவர்கள்தான் விவசாயி இல்லையே ஏன் தயக்கம்?


Saai Sundharamurthy AVK
ஏப் 21, 2024 22:29

டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் நடக்கும் எல்லா போராட்டங்களுக்கும் காரணம் இந்தியாவுக்கான பச்சை துரோகி கெஜ்ரிவால் தான்.


M Ramachandran
ஏப் 21, 2024 20:13

போராட்டத்தை கையாள தெரியாத துப்பில்லாத பஞ்சாப் அரசு டிஸ்மிஸ் செய்யலாம்


sham
ஏப் 21, 2024 21:48

Haryana BJP Government ruling


NALAM VIRUMBI
ஏப் 21, 2024 20:13

இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு பிரதமர் மதிப்பை கெடுக்க நினைக்கும் நச்சுப் பாம்புகளின் செயல் எடுபடாது இதில் சில வெளிநாட்டு சக்திகளும் சேர்ந்துள்ளன


Godfather_Senior
ஏப் 21, 2024 20:08

பொது மக்களுக்கு சங்கடம் தருபவர்களை சிறையில் அடைப்பதுதான் ஒரே வழி இதுவே தீவிரவாதிகளின் பின்னணியில் நடக்குமானால் ENCOUNTER சாலச்சிறந்தது உண்மையான விவசாயிகள் நிச்சயம் பொதுமக்களை தவிக்க விடமாட்டார்கள்


Bye Pass
ஏப் 21, 2024 19:40

பொதுமக்கள் தான் தீர்வு காண வேண்டும்


முக்கிய வீடியோ