உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சாலை அரிப்பு

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சாலை அரிப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் இருந்து சின்ன சோழியம்பாக்கம், பெரிய சோழியம்பாக்கம் வழியாக ஏனாதிமேல்பாக்கம் வரை செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது. அந்த சாலையில் சின்ன சோழியம்பாக்கம் எல்லையில், பொன்னியம்மன் கோவில் தெரு அருகே கடந்த ஆண்டு மழைக்காலத்தின் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையோரம் அரிப்பு ஏற்பட்டது. பெரும் பகுதி அடித்து சென்றதால், சாலையோரம் பள்ளத்தாக்கு போன்று காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அச்சத்துடன் அப்பகுதியை கடக்க வேண்டிய கட்டாய நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர். சாலை அரிப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் மாநில நெடுஞ்சாலை துறையினர் துரித நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சாலை அரிப்பை சீர் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ