உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வேன் மோதி வியாபாரி பலி

வேன் மோதி வியாபாரி பலி

மாதவரம், மூலக்கடை அடுத்த எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் தாமஸ்சேகர், 63; சாலை ஓரம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்.நேற்று முன்தினம், பால் பாக்கெட் ஏற்றி வந்த வேன், கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் நின்றிருந்த தாமஸ்சேகர் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தாமஸ்சேகரின் உடலை மீட்டனர். விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபு, 30, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !