உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / திருத்தணியில் ஒரே நாளில் 105 திருமணம்: கடும் நெரிசல்

திருத்தணியில் ஒரே நாளில் 105 திருமணம்: கடும் நெரிசல்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், முகூர்த்த நாளான நேற்று காலை, 40 திருமணங்களும், சுற்றியுள்ள திருமண மண்டபங்களில், 65 திருமணங்களும் நடந்தன. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.பெரும்பாலானோர் பேருந்து, கார், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்ததால், திருத்தணி ம.பொ.சி., சாலை மற்றும் திருத்தணி - அரக்கோணம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் 1 கி.மீ., துாரம் அணிவகுத்து நின்றன.இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பாதாசாரிகளும் சிரமப்பட்டனர். மலைப்பாதையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.இதேபோல், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலிலும் நேற்று, பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்ததால், கோவிலையொட்டிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை