உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / போலீஸ் ஸ்டேஷனில் கத்தியை காட்டி மிரட்டல் 2 பேர் கைது

போலீஸ் ஸ்டேஷனில் கத்தியை காட்டி மிரட்டல் 2 பேர் கைது

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்குதெரு முத்துச்சாமி 26. அதே பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன்.இவர்கள் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் போதையில் போலீசாரை அவதூறாக பேசினர். இதனை தலைமை காவலர் கணேசன் கண்டித்து அவர்களை எச்சரித்தார். அப்போது இருவரும் போலீஸ்காரர் கணேசனை பணி செய்யவிடாமல் தடுத்தனர். முத்துச்சாமி இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 'நாங்கதாண்டா இந்த ஏரியாவுல பெரிய ரவுடி' எனவும், எங்கள் மீது வழக்கு போட்டால் கொல்லாமல் விடமாட்டோம் எனவும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். போலீஸ்காரர் கணேசன் புகாரின்பேரில் எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை மற்றும் போலீசார் விசாரித்து முத்துச்சாமி உட்பட இருவரையும் கைது செய்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி