80 பேருக்கு காசநோய் ஊடுகதிர் பட பரிசோதனை
ஈரோடு, சிவகிரி வட்டாரம், தாமரைபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கல்வெட்டுபாளையம் பகுதியில், காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடந்தது.காசநோய் அறிகுறி, பாதிப்பு, பரிசோதனை, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன், அரசின் உதவித்தொகை குறித்து சுகாதார நலக்கல்வி சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், டாக்டர் அட்சயா, முதுநிலை மேற்பார்வையாளர் பாலகுமார், சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில் பங்கேற்ற, 80 பேருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.