உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / குமரன்குன்றம் கோவிலில் ரூ.60 லட்சத்தில் நிழற்குடை

குமரன்குன்றம் கோவிலில் ரூ.60 லட்சத்தில் நிழற்குடை

குரோம்பேட்டை, குரோம்பேட்டை குமரன்குன்றம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, பல்லாவரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 60 லட்சம் ரூபாய் செலவில், நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது.பல்லாவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, குமரன்குன்றத்தில் முருகன் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோவிலுக்கு, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இக்கோவில் அடிவாரத்தில் நிழற்குடை இல்லாததால், முருகனை தரிசிக்க படியேறுவோரும், இறங்குவோரும் ஒதுங்க இடமின்றி சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கோவில் அடிவாரத்தில், பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதி, 60 லட்சம் ரூபாய் செலவில், நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது.மழை, வெயில் காலத்தில் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள், எவ்வித சிரமமுமின்றி இங்கு நின்று ஓய்வெடுத்து செல்லலாம். விரைவில் இந்த நிழற்குடை பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ