உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஊட்டிக்கு துாக்கியடிக்கப்பட்ட உல்லாச அதிகாரி!

ஊட்டிக்கு துாக்கியடிக்கப்பட்ட உல்லாச அதிகாரி!

“துரைமுருகனே நேர்ல போய் வாழ்த்தியிருக்காரு பா...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.“யாரைங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.“துணை முதல்வர் உதயநிதி, சமீபத்துல 47வது பிறந்த நாளை கொண்டாடினாரே... ஸ்டாலின், துணை முதல்வரா இருந்தப்ப, அரசு பங்களாவான குறிஞ்சி இல்லத்தில் தான்,தன் பிறந்த நாள்ல கட்சியினரை சந்திப்பாரு பா...“அதே மாதிரி, உதயநிதியும் குறிஞ்சி இல்லத்தில் கட்சியினரை சந்திச்சாரு... வந்த எல்லாருக்கும் தடபுடலானஅசைவ விருந்தும் போட்டாருப்பா...“மூத்த அமைச்சரான துரைமுருகனே நேர்ல வந்து வாழ்த்து சொல்லியிருக்காரு... 'தன் மகன்கதிர் ஆனந்துக்கு வேலுார்மாவட்ட செயலர் பதவிக்காக முயற்சி பண்ணிட்டுஇருக்கிறதால தான் இந்தஐஸ்'னு கட்சியினர் முணுமுணுத்தாங்க பா...“இன்னொரு மூத்த அமைச்சர் ரெண்டு முறைஅடுத்தடுத்து வந்தும்,உதயநிதியை சந்திக்க முடியல... மனம் தளராம,மூணாவது முறையா போய் பார்த்து வாழ்த்திட்டாரு... “கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலரை உள்ளே விட, போலீசார் மறுத்திருக்காங்க... அவங்க, 'நாங்க எம்.எல்.ஏ., சார்'னு சொன்ன பிறகு தான் உள்ளே விட்டிருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.“அதிகாரிகளுக்கு தேநீர் விருந்து குடுத்து அசத்திட்டா ஓய்...” என்றகுப்பண்ணாவே தொடர்ந்தார்...“மத்திய அரசு அமைத்துள்ள 16வது நிதிக்குழு, சமீபத்துல தமிழகம் வந்துச்சோல்லியோ... குழுவிடம் தமிழக அரசின் தேவைகள் குறித்து, நிதித்துறை அதிகாரிகள் தரப்பில் சிறப்பா விளக்கம்குடுத்திருக்கா ஓய்...“இதுக்காக, குழுவினரும் நம்ம அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிச்சிருக்கா...இதனால, துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசும், செயலர் உதயசந்திரனும் உற்சாகமாகிட்டா... இதனால, சமீபத்துல அந்த அதிகாரிகளுக்கு ரெண்டு பேரும் தேநீர் விருந்து குடுத்து, அவாளை பாராட்டி அனுப்பியிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.“தண்டனை குடுத்தும்,திருந்தாதவரை ஊட்டிக்குதுாக்கி அடிச்சுட்டாவ வே...” என, கடைசி தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.“யாரை சொல்றீங்க...”என கேட்டார், அந்தோணிசாமி.“பெரம்பலுார் மாவட்டம், மங்கலமேடுபோலீஸ் ஸ்டேஷன்லஒரு அதிகாரி இருந்தாரு...இவரது ஸ்டேஷன் லிமிட்ல இருக்கிற ஒரு கிராமத்துக்கு தேர்தல் பணிக்கு போயிருந்தப்ப,மகளிர் போலீசார் ஓய்வு எடுக்க ஒரு வீட்டை ஏற்பாடு செஞ்சு குடுத்தாரு வே...“அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டுல இருக்காரு... அவரது மனைவியிடம்மொபைல் நம்பரை வாங்கி, பேசி பேசி நெருக்கமாகிட்டாரு... அந்த பெண்கிட்ட இருந்துபணம், நகைன்னு சுருட்டிட்டும் இருந்திருக்காரு வே...“இதனால, அந்த பெண் வீட்டுல பூகம்பம்வெடிச்சிட்டு... அந்த பெண்ணின் பெற்றோர்,போலீஸ் அதிகாரி மீதுமாவட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் குடுத்தாவ...இதனால, அதிகாரியை ஆயுதப்படைக்கு துாக்கியடிச்சாவ வே...“அப்புறமும் அவர் திருந்தாம, அந்த பெண் வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வந்திருக்காரு...அதிகாரி மேல சென்னைவரைக்கும் புகார்கள் போக, அவரை இப்ப ஊட்டிக்கு துாக்கி அடிச்சுட்டாவ...“இதனால நொந்து போனவர், 'மங்கலமேடு சரக உயர் அதிகாரிகூட என்னை மாதிரியானஆள்தான்... ஆனா, என்னை மட்டும் தண்டிக்கிறது என்ன நியாயம்'னு புலம்பிட்டேஊட்டிக்கு வண்டி ஏறியிருக்காரு வே...” என முடித்தார், அண்ணாச்சி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Indian
டிச 02, 2024 14:55

வாரிசு அரசியல்


நிக்கோல்தாம்சன்
டிச 01, 2024 13:38

நடக்கும் கொலைகளை கண்டுபிடிக்காம ஊரான் வீடு தேடி ஓடும் இந்த காவல்துறையினர் தமிழக கார்பொரேட் குடும்ப மாடலை சரியாக நாடிபிடித்து பாலோ பண்றங்களே


Anantharaman Srinivasan
டிச 01, 2024 12:21

திமுக வின் Senior most அமைச்சரின் நிலைமை.. தன் மகன் கதிர் ஆனந்துக்கு வேலுார் மாவட்ட செயலர் பதவிக்காக திமுக வின் Junior most உறுப்பினர் கருணாநிதி பேரனை கூட தாஜா செய்ய வேண்டியுள்ளது. பதவி பொல்லாதது. மனம் சொன்னாலும் கேளாதது.


Barakat Ali
டிச 01, 2024 12:11

அந்த பெண்கிட்ட இருந்துபணம், நகைன்னு சுருட்டிட்டும் இருந்திருக்காரு ....... ஊசி நுழைய இடம் கொடுக்கலை ன்னா நூலு நுழைய முடியுமா ????


D.Ambujavalli
டிச 01, 2024 07:02

இவர் போய் அவர் மேல் புகார் கொடுத்தால் ' நீ என்ன யோக்கியன்'? என்று கேள்வி வரும் ஒரு வேளை அந்த அதிகாரி மேலிடத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கலாம் பின்னணியை கெட்டியாக வைத்துக்கொண்டு இதெல்லாம் செய்ய வேண்டுமென்று தெரியாதா ?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 01, 2024 05:57

ஏவல் துறையிலும் திராவிடியாள் மாடல் எப்பவோ பரவிருச்சு ......


புதிய வீடியோ