உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / டெண்டரை இறுதி செய்ய கான்ட்ராக்டர் நியமனம்!

டெண்டரை இறுதி செய்ய கான்ட்ராக்டர் நியமனம்!

''எல்லை தாண்டி மூக்கை நுழைக்கிறாருங்க...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''தென்னிந்திய திருச்சபை என்ற சி.எஸ்.ஐ.,யின், துாத்துக்குடி -- நாசரேத் டயோசீசன் நிர்வாகத் துக்கு, 2021ம் வருஷம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டாங்க... இந்த நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுல நிறைய கல்வி நிறுவனங்கள் இருக்குது... பண புழக்கம் அதிகம் இருக்கிறதால, பதவிகளை பிடிக்க கடும்போட்டி நடக்குமுங்க...''டயோசீசன் பொருளாளரா இருந்த மோகன்ராஜ் அருமைநாயகத்தை, 'சஸ்பெண்ட்'செய்துட்டாங்க... அவர் கோர்ட்டுக்கு போய், அதுக்கு தடை வாங்கிட்டாரு... ஆனாலும், அவரை மறுபடியும் பொருளாளரா பொறுப் பேற்க விடாம, டயோசீசன் நிர்வாகிகள் தடுக்கிறாங்க...''இவங்களுக்கு உள்ளூர்போலீசார் சிலரும் ஆதரவாஇருக்காங்க... பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவரான, சட்டசபையில் முக்கிய பதவியில இருக்கிறவர் டயோசீசன்நிர்வாகத்துல தேவையில்லாம தலையிடுறதா சொல்றாங்க...''ஏற்கனவே இந்த நிர்வாகத்துல தலையிட்டதால தான், திருநெல்வேலிஎம்.பி.,யா இருந்த ஞானதிரவியத்துக்கு, கடந்த லோக்சபா தேர்தல்ல சீட் தரல... இப்பவும் முக்கிய புள்ளி தலையிடுறதால, அவரை பத்தியும் ஆட்சி மேலிடத்துக்கு புகார்கள் போயிருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''மாவட்டத்துல மூணு கோஷ்டிகள் உருவாகிட்டுல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியேதொடர்ந்தார்...''திருப்பூர் புறநகர் மாவட்ட தி.மு.க., முக்கிய புள்ளி, உடுமலைசட்டசபை தொகுதியில்,தனக்குன்னு தனி கோஷ்டியை உருவாக்கியிருக்காரு...தனக்கு தலையாட்டுற ஒன்றிய செயலர்களுக்குமட்டும் தேவையானதைசெஞ்சு குடுக்காரு வே...''மற்ற சீனியர்கள், ஒன்றிய நிர்வாகிகளை கண்டுக்கிறதே இல்ல... 'டாஸ்மாக்' மாமூல் மொத்தத்தையும் அவரேஎடுத்துக்கிடுதாரு... கட்சிநிர்வாகிகளுக்கு பங்கு தர்றதில்ல வே...''இது சம்பந்தமா, மாவட்ட அமைச்சர்சாமிநாதனிடம் புகார் தெரிவிச்சும் நடவடிக்கைஇல்ல... இதனால, அதிருப்தியடைஞ்ச ஒன்றிய நிர்வாகிகள், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜியை பார்த்து, முக்கிய புள்ளி பற்றி புகார்களை அடுக்கியிருக்காவ வே...''உடுமலை தொகுதியின்பெரும் பகுதி, கோவை மாவட்டத்துக்குள்ள வர்றதால, செந்தில் பாலாஜியும், அதிருப்தி கோஷ்டிக்கு அடைக்கலம்தந்திருக்காரு... இப்ப, திருப்பூர் புறநகர் மாவட்டத்துல, முக்கிய புள்ளி, அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில் பாலாஜின்னு மூணு கோஷ்டிகள் வலம் வருது வே...'' என்றார், அண்ணாச்சி.''டெண்டரை இறுதி பண்ணவே, புதுசா ஒருத்தரை நியமிச்சிருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''கோவை மாநகராட்சியில், யாருக்கு டெண்டர்தர்றதுங்கிறதுல அதிகாரிகள் ராஜ்யம் தான் நடந்துச்சு... இதனால ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் எல்லாம் சேர்ந்து, டெண்டர் யாருக்குன்னு முடிவெடுக்க, 'வாட்ஸாப் குரூப்'பை நடத்துனாங்க பா...''இது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்திடுச்சு... இதனால, யாருக்கு டெண்டர் தரலாம்னு இறுதி முடிவெடுக்க ஒரு கான்ட்ராக்டரை நியமிச்சிருக்காங்க... இவர்,மாவட்டத்துக்கு பொறுப்புவகிக்கும் முக்கிய புள்ளிக்கு வேண்டியவர்என்பது கூடுதல் தகவல் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.பெரியவர்கள் கிளம்ப,பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை