பி.எஸ்.சி., நர்சிங் வகுப்பு தொடக்க விழா
பி.எஸ்.சி., நர்சிங் வகுப்பு தொடக்க விழாசேலம், சேலம் இரும்பாலை அருகே, அரசு செவிலியர் கல்லுாரியில், பி.எஸ்.சி., நர்சிங் முதலாமாண்டு வகுப்பு தொடக்கவிழா மற்றும் வரவேற்பு விழா நேற்று நடந்தது.மருத்துவக்கல்லுாரி டீன் தேவிமீனாள் தலைமை வகித்து, பிளாரன்ஸ் நைட்டிங் கேர்ள் உறுதிமொழியை வாசிக்க, அதை மாணவ, மாணவியர் ஏற்று கொண்டனர். அப்போது, குன்றின் மேலிட்ட விளக்குபோல, செவிலியர் சேவையில் ஒளி வீச, மாணவ, மாணவியர் திறம்பட பயிற்சி பெற வேண்டும் என, அறிவுரை வழங்கினார். தொடர்ந்து செவிலியர் கல்லுாரி முதல்வர் இனியவள் பேசுகையில், ''நிலவுக்கு சென்ற எட்வின்சி ஆண்ட்ரின், நிலவில் கால் வைக்க தயங்கினார். அதனால், அவருடன் சென்ற உதவியாளர் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதிந்து, சாதனை படைத்தார். அதேபோல தன்னம்பிக்கை, தைரியத்துடன் பயிற்சியில் ஈடுபட வேண்டும்,'' என கேட்டு கொண்டார். செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் முருகாயி, மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமாரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார் உள்பட கலந்து கொண்டனர்.