உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சர்ச்சை அமைச்சரின் துறைகளை மாற்ற முதல்வர் முடிவு!

சர்ச்சை அமைச்சரின் துறைகளை மாற்ற முதல்வர் முடிவு!

நாளிதழை மடித்தபடியே, “சம்பளம் வராம புலம்பறா ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. “எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய். “துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒன்றியத்தில் இருந்த 13 பஞ்சாயத்துகள், தென்காசி மாவட்டம் உருவானப்ப, அங்கிருந்த குருவிகுளம் ஒன்றியத்துக்கு போயிடுத்து... பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, கடந்த தி.மு.க., ஆட்சியில், 13 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி ஒன்றியத்தில் சேர்த்தா ஓய்... “இந்த 13 பஞ்சாயத்துகள்ல இருந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்ல வேலை பார்க்கற 60 ஆசிரியர்களுக்கு, கோவில்பட்டி உதவி தொடக்க கல்வி அலுவலகம் மூலம் சம்பளம் வழங்க ஏற்பாடு செஞ்சா... ஆனா, இதுல என்ன குளறுபடி நடந்ததுன்னு தெரியல ஓய்... “பல ஆசிரியர்களுக்கு சில மாசங்களா சம்பளம் வரல... கோவில்பட்டி தொடக்க கல்வி அலுவலக அதிகாரிகளிடம் கேட்டா, அலட்சியமா பதில் சொல்றதா ஆசிரியர்கள் புலம்பறா ஓய்... “இது சம்பந்தமா, ஆசிரியர்கள் சங்கம் சார்பில், முதல்வருக்கு மனுக்கள் அனுப்பியும் தீர்வு கிடைக்கல... இதனால, கல்வித் துறை அதிகாரிகளை கண்டிச்சு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் தயாராகிண்டு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா. “கோவிலுக்கு வாங்கிய காரை, ‘கொத்திட்டு’ போயிட்டாவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... “சென்னை பாரிமுனையில், கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் இருக்குல்லா... இந்த கோவில் பணத்துல, 2022ல் தி.மு.க., ஆட்சியில், ‘பொலீரோ ஜீப்’ வாங்கினாவ வே... “ஆனா, ஒரே மாசத்துல அந்த ஜீப்பை அறநிலையத் துறை கமிஷனர் ஆபீசுக்கு எடுத்துட்டு போயிட்டாவ... நாலு வருஷமா, ஜீப்பை தலைமை அலுவலக அதிகாரிகள் தான் பயன்படுத்திட்டு இருக்காவ வே... “இதுல பெரிய கொடுமை என்னன்னா, அந்த ஜீப்புக்கான டிரைவர் சம்பளம், டீசல், பராமரிப்பு, ‘இன்சூரன்ஸ்’ எல்லாத்தையும் இன்னைக்கு வரை கோவில் நிர்வாகம் தான் செஞ்சிட்டு இருக்கு... ஜீப்பை கேட்டு கேட்டு அலுத்து போன அறங்காவலர்கள் குழு, சமீபத்துல தலைமை அலுவலகத்துக்கு காரசாரமா ஒரு கடிதம் அனுப்பிட்டு வே... “அதுல, ‘இன்னும் ஒரு வாரத்துல ஆர்.சி., புக் உள்ளிட்ட ஆவணங்களுடன் கோவில்ல ஜீப்பை ஒப்படைக்கணும்... இல்லாட்டி, ஐகோர்ட்ல மனு போட்டு அதிகாரிகளை கோர்ட்டுக்கு இழுத்துடுவோம்’னு எச்சரிக்கை விடுத்திருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “அதிகாரங்களை குறைக்க முதல்வர் முடிவு பண்ணிட்டாருங்க...” என்றார் அந்தோணிசாமி. “யாருக்கு பா...” என கேட்டார் அன்வர்பாய். “த.வெ.க.,வை சேர்ந்த அமைச்சர் நிர்மல் குமாரிடம் மின்சாரம், சட்டம், சிறை உட்பட ஏழு துறைகள் இருக்கு... மின்வெட்டு, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல், சிறைகள்ல இருந்து கைதிகள் தப்பிக்கிறதுன்னு இவரது துறைகள்ல ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் நடக்குதுங்க... “இதுபோக, எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளுக்கும் நிர்மல் குமார் தான் விளக்கம் தந்துட்டு இருக்காரு... ‘அவரிடம் ஏழு துறைகள் இருக்கிறதால, எதுலயும் உருப்படியா கவனம் செலுத்த முடியல’ன்னு, அந்த கட்சியினரே சொல்றாங்க... “சீக்கிரமே அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு பேச்சு அடிபடுது... அப்ப, நிர்மல் குமாரிடம் இருக்கிற சட்டம், சிறை துறைகளை வேற அமைச்சருக்கு கைமாத்தி விட முதல்வர் விஜய் முடிவு பண்ணியிருக்காருங்க...” என முடித்தார் அந்தோணிசாமி. பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
நவ 05, 2026 20:18

'பல. பட்டறை. வேலை'. செய்யும். இந்த. அமைச்சர். அழையா. விருந்தாக. எல்லா. அமைச்சர்களுக்காகவும். தானே. பெரிய. ஆளாக. காட்டிக்கொண்டு. குரல். கொடுப்பதை. முதல்வர். முதலில். அடக்குவாரா ?


duruvasar
நவ 05, 2026 17:45

ஒன்னு விடாம ஏழு துறையிலும் சொதப்பிய நபரை அமைச்சரவையிலிருந்து தூக்கினால் மற்றொரு வெத்து பீஸுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே என்ற டவுட்டு வரவில்லையா


வில்லிபுத்தூரான்
நவ 05, 2026 13:59

தற்குறிகளின் ஆட்சிக்கு அமைச்சர்களே சாட்சி.


Kalyanaraman Subramaniam
நவ 05, 2026 07:43

ஒரு துறையை நிர்வகிக்கவே வக்கு இல்லாத ஆளுங்ககிட்டே எல்லாம் 7 துறைகளை கொடுத்திருக்கிற நடிகரின் அறிவை எப்படி மெச்சுவதென்றே தெரியவில்லை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை