உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி குழந்தைகளுடன் கலந்துரையாடல்

 காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி குழந்தைகளுடன் கலந்துரையாடல்

திருவள்ளூர்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெற்ற, 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சியில், குழந்தைகளுடன், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கலந்துரையாடினார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, 'அன்பு கரங்கள்' திட்டத்தின் கீழ், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, உடல் மற்றும் மனநல மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, நன்னடத்தை அலுவலர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை