உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  உதவி தொகையை உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 உதவி தொகையை உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கே.கே.நகர்: மாதாந்திர உதவித்தொகை, 1,500 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கக் கோரி, தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கத்தினர், கே.கே.நகரில் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, கேட்கும் திறன், பேச்சுத் திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர உதவித்தொகையை 1,500 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அ ரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில், சைகை மொழி பெயர்ப்பாளர் களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, தென்சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசனை சந்தித்து, தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி