பிங்க் ஆட்டோ ஓட்டிய ஆண்கள் ஐந்து பேருக்கு ரூ.5,000 அபராதம்
சென்னை, சென்னையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க வசதியாக, பெண்களே ஓட்டும் வகையிலான இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, அரசு அறிமுகம் செய்தது.இந்த ஆட்டோக்களை பெரும்பாலும் ஆண்களே ஓட்டுவதால், பெண்கள் அதிருப்தியடையும் சூழல் ஏற்பட்டது.இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்தார்.அடுத்தடுத்த புகார்கள் வந்ததை அடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, போக்குவரத்து திட்டமிடல் உதவி கமிஷனர் பாஸ்கர் கூறுகையில், ''மூன்று நாட்களில், இளஞ்சிவப்பு ஆட்டோ ஓட்டி வந்த ஐந்து ஆண்களுக்கு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.ண்டு வருகிறோம் என்றார்.