ரேலா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
குரோம்பேட்டை, உலக இதய தினத்தை முன்னிட்டு, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில், செப்., 28ம் தேதி, இலவச இதய நோயறிதல் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில், நான்கு இறப்புகளில் ஒன்று, உடல் பருமன், புகை பிடித்தல், மிகை ரத்த அழுத்தம், உடல் உழைப்பற்ற சோம்பேறித்தனமான பழக்க வழக்கம் மற்றும் இதய நாள நோய்கள் ஆகியவற்றால் ஏற்படுகின்றன. இதயம் தொடர்பான பாதிப்புகள், அச்சுறுத்தும் வகையில் வேகமாக உயர்ந்து வருவதற்கு, இந்த காரணிகள் முக்கியமாக உள்ளன. பொதுமக்களுக்கு இலவச இதய பரிசோதனை மற்றும் இதயவியல் மருத்துவருடன் கலந்தாலோசனை சேவையை வழங்கும் நோக்கத்துடன், உலக இதய தினத்தை முன்னிட்டு, செப்., 28ம் தேதி, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில், ஒரு நாள் இலவச முகாம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர், 93846 81770 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.