காளான் வளர்ப்பு இலவச பயிற்சிக்கு
முன்பதிவு அவசியம் சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் டிச., 5 காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, காளான் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி நடக்க உள்ளது. அதில் உணவு காளான் வகைகள், சத்துகள், மதிப்பு கூட்டுதல், வித்து தயாரிப்பு, காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி, செயல் விளக்கம் அளிக்கப்படும். முதலில் பதிவு செய்யும், 50 பேர் மட்டும் பயிற்சிக்கு அனுமதிக்கப்படும். அதற்கு விவசாயிகள், இளைஞர்கள், பண்ணை மகளிர், 9095513102, 9080186667 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தெரிவித்தார்.